பார்த்ததில் பிடித்தது


என்னை பற்றிய ஒரு சின்ன குறிப்பு. காதல் கதைகளை அதிகமாக விரும்பி நான்பார்பதில்லை. சிரிப்பு படங்களையே விரும்புவேன். அல்லது

சந்தோஷமாக (பீல் குட்) இருக்கும் படங்கள், விசு படங்கள் (மதியான வேலையில் விசு படங்கள் பார்ப்பது ஒரு தனி சந்தோஷம் தான் )வித்தியாசமான கதை உள்ள படங்கள் பார்க்க பிடிக்கும் . காதல் படங்கள்  முக்கால் வாசி cheesy ஆக இருக்கிறது என்பது என் கருத்து,முக்கியமாக தமிழ் படங்களில் .

எனக்கு பிடித்த காதல் கதைகளில் சில, இதோ

(வரிசையில் அல்ல)

அலைபாயுதே

காதல் என்றால் என்ன என்று தெரியாத ஒரு வயதில் அதிக ‘IMPACT FACTOR’ தந்த படம் இது. அன்று ஏன் பிடித்தது என்று தெரியவில்லை. ஆனால், இன்று புரிகிறது. இந்த மாரியான ஒரு எதார்த்தமான காதல் கதை தான் நம் ஒவ்வொருவரும் தேடிகிறோம். நான் தேடுவது என்று மட்டும் சொல்கிறேன்.

ஒரு ‘complete’ கதை என்றே சொல்லாம். ஆண்களின் எண்ணங்களையும் பெண்ணகளின் மனக்கிளர்சியையும் மிகவும் அழகாக காட்டி உள்ளார் மணி ரத்னம். என் all time favourite இந்த படம்.

மௌன ராகம்

கொஞ்சம் பழைய படம் தான்.அனால் அந்த காலகட்டத்தில் இப்படியும் ஒரு காதல் கதையா என்று எண்ண கூடிய ஒரு படம். ஒரு inspiration. ரேவதியின் பாத்திரம் மிக அழகாக வர்ணிக்கப்பட்டது. கார்த்திக் ஒரு 10 நிமிஷம் வந்தாலும் மனதில் பதிந்துவிட்டார். எனக்கு தெரிந்தே என்னுடைய பல ஆண் நண்பர்கள் தங்களை கார்த்திக் ஆகவோ மோகன் ஆகவோ நினைத்து, அந்த ஸ்டைலை பின்பற்ற எண்ணினார்கள்.”Cool Characterization”. மணி ரத்னம்க்கு ஒரு SALUTE.

கண்ட நாள் முதல்

Cute காதல் கதை. பிரசன்னா கலக்கல். லைலாவுக்கு நடிக்கவும் தெரியுமா என்ற ஒரு கேள்வி எழுந்தது இப்படத்தினால். “பீல் குட்”படம். இப்படம் ஏன் பெரிய ஓட்டம் இல்லை என்று எனக்குப்  புரியவில்லை.எலியும் பூனையுமாக இருக்கும் இருவருக்குள் அழகான ஒரு காதல் எட்டி பார்க்குது. எப்போதும் உள்ள தமிழ் படங்கள் போல் சண்டை காட்சிகள், எக்கச்சக்க அழுகாச்சி காட்சிகள் இல்லாமல் மனதிற்கு  இதமாக இருக்கும் ஒரு படம். படத்தை பார்த்துவிட்டு  சந்தோஷமாக வெளியே செல்லலாம். நான் பல முறை பார்த்து ரசித்த படம் இது.

பிரணயம்

மோகன்லால்-அனுபம் கேர்-  ஜெயப்பிரதா, இவர்கள் தான் இந்த படத்தின் PROTOGANISTS . இல்லை. இது முக்கோண காதல் கதை அல்ல. இதை பற்றிய விமர்சனம் ஏற்கனவே சுமாராக நான் எழுதி இருக்கிறேன்  (கீழே scroll  பண்ணி படிக்கவும் ) ஒளிப்பதிவும், இயக்குமும், கதாபாத்திரங்களின் நடிப்பும், திரைக்கதை என்று அனைத்துமே ஒரு விதமான நிறைவு எனக்கு கொடுத்தது. ஏற்கனமே மோகன்லால் என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். இந்த படம் பார்த்த பிறகு அவர்மேல் உள்ள மரியாதை அதிகமானது. காதல் கதையை விரும்பி பார்பவர்கள், இப்படத்தை மறக்காமல் பார்க்கணும்.

காதலிக்க நேரமில்லை

இந்த படம் காதல் கதை வரிசையில் இல்லாமல் சிரிப்பு படம் வரிசையில் தான் நான் எழுத வேண்டும். ஆனால் நான் மிகவும் ரசித்து பார்த்த படம் இது.ஒரு 100 தடவையாவது பார்த்திருப்பேன். 1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம் என்ற பழமொழிக்கு அழகான எடுத்துகாட்டு இந்தப் படம்.

VTAF0302N.jpg (240×271)

மொழி

மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு பார்வைகள் போதுமே அதில் வார்த்தை பேசி பழகு; சொல்லி முடிக்கும் ஒரு  சொல்லின் வட்டத்தில் பலர் சொல்லி போன ஒரு பொருள் இருக்கும்.சொல்லை கடந்த பெண்ணின்  மௌன கூட்டுகள் பல கோடி கோடி பொருள் குடி  இருக்கும். இவ்வரிகளே படத்தின் கரு.தனது குறையை நிறை ஆக்கிய ஒரு பெண்,அவளின் உணர்வுகள்.ஜோதிகாவின்  நடிப்பில் இப்படம் ஒரு மையில்கல். வெளி தோற்றத்தில் தன்னை மிகவும் தைரியமாக காட்டிகொள்ளும் ஒரு பெண், உள்ளுக்குள் ஒரு insecured மனநிலையில் வாழ்கிறாள். காதலும்,ஆண்களும் நம்பிக்கையானவர்கள் இல்லை என்று நினைக்கும்  அவள் எண்ணத்தை மாற்றும் ஹீரோ. எளிமையான காதல் கதை உள்ள ஒரு படம் மொழி.

Mozhi.jpg (400×302)

மறுபடியும்

இது காதல் கதைன்னு சொல்ல முடியாது. நட்பு,ஏமாற்றம், காதல் எல்லாம் இருக்கும் ஒரு படம், பாலு மகேந்திரா படம் என்றாலே ஒரு வேறுப்பட்ட கதை இருக்கும். இப்படத்திலும் அதே தான். விவாகரத்து என்பது இப்போது சகஜமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் இப்படம் வந்த காலத்தில் அப்படி இல்லை. என் மனதை நெகிழ வைத்த படம். எதார்த்தம்.இந்த ஒரு வார்த்தை போதும் இப்படத்தை பற்றி விமர்சனம் செய்யணும் என்றால்.

Marupadiyum_B.jpg (400×400)  


அபூர்வ ராகங்கள் 

வயது வரும்பு மீறின ஒரு காதல் கதை. ஒரு வேலை சிம்பு இப்படத்தை பார்த்துவிட்டு தான் வல்லவன் படம் எடுத்தாரோ என்னவோ.இப்படத்தையும் வல்லவன் படத்தையும் ஒப்பிட்டு பேசுவதற்கு மன்னிக்கவும். வயது வித்தியாசம், கடந்த காலம், எதையும் பார்க்காமல்,காதலித்து, பிறகு காலச் சூழ்நிலையால் பிரிந்து போகின்றனர். இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது கதை கரு மட்டும் அல்ல,இதனுடைய பாடல்களும். Its  a musical movie .


நிழல் நிஜமாகிறது 

இந்த படம் பலமுறை  பார்த்தவர்களுக்கு மட்டுமே இந்த படத்தை நான் என் இந்த வரிசையில் சேர்த்துள்ளேன் என்று புரியும் என நம்புகிறேன்.Blossoming of loveஐ அழகாக காட்சி அமைத்திருப்பார் நம் இயக்குனர் .மேலும், sobhaவின் பாத்திரம், அவரின் சிந்தனைகளும் அழகாகவும்,வித்யாசமாகவும் இயக்குனர் சித்தரித்திருப்பார் 


nizhal-nijamagiradhu-films-photo-u2.jpg (250×250)

பின்குறிப்பு: இன்னும் நிறய படங்கள் என் லிஸ்டில் உண்டு.ஞாபகம் இல்ல.ஞாபகம் வர வர சேர்த்துகிட்டே வருவேன்.தமிழ்ல எழுதனும் எனக்கு ரொம்ப ஆசை. ஏதோ என்னால் முடிஞ்ச அளவுக்கு முயற்சி செய்திருக்கிறேன். பிழைகளை மன்னிக்கவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s